ADDED : ஆக 02, 2025 02:12 AM
விருதுநகர்:விருதுநகர் ஜி.என்.பட்டியில் உள்ள கம்பி மத்தாப்பு பட்டாசு ஆலை வளாகத்தில்பசை ஒட்டுவதற்காக இருந்த அடுப்பு அருகே சென்ற போதுதொழிலாளி ஈஸ்வரி 45, உடலில் மருந்து இருந்ததால் தீ பரவி காயமடைந்தார்.
விருதுநகர் ஜி.என்.பட்டியில் துர்கா கம்பி மத்தாப்பு ஆலை செயல்படுகிறது. டி.ஆர்.ஓ., உரிமம் பெற்றது. இதன் வெளியே கம்பி மத்தாப்புகளை மருந்து கலவையோடு பொருத்தி காய வைத்துவருகின்றனர். இவ்வாறு பொருத்தி விட்டு வளாகத்தில் கை கழுவ தொழிலாளர்கள் செல்வர். அதன் அருகே மூலப்பொருளை பசை ஒட்டுவதற்காக எரியும் அடுப்பு இருந்துள்ளது. நேற்று மாலை பணி முடிந்து நாராயணசாமி மனைவி ஈஸ்வரி கை கழுவ சென்றார். அப்போது உடலில் ஒட்டியிருந்த மருந்துக்கலவை, அடுப்பின் கங்கு வெப்பத்தால் தீயாக மாறி அவர் மீது பரவியது. உடனிருந்தோர் சிறிதாக தீ பரவியதுமே அணைத்துவிட்டனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 27 சதவீத காயத்துடன் ஈஸ்வரி விருதுநகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.