/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிதையும் கான்சாபுரம் கல்மண்டபம்
/
சிதையும் கான்சாபுரம் கல்மண்டபம்
ADDED : ஆக 02, 2025 02:21 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தில் இருந்து அத்தி கோவில் செல்லும் ரோட்டில் உள்ள பழமையான கல்மண்டபம் சிதைந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு இடங்களில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல மண்டபங்கள் உள்ளன.
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சவால் விடும் வகையில் கலைநுணுக்கத்துடன் கட்டப்பட்ட இக்கல் மண்டபங்கள், எந்த ஒரு அரசு துறைகளின் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகிறது. கல் மண்டபங்கள் அமைந்துள்ள ரோடுகளின் வழியாக கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள் அடிக்கடி பயணித்து வந்தாலும், சீரமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கல் மண்டபங்கள் மேலும் சிதைந்து வருகிறது.
இதில் கான்சாபுரத்தில் இருந்து அத்தி கோவில் செல்லும் ரோட்டில் உள்ள கல் மண்டபமும் பல ஆண்டுகளாக சிதைந்து காணப்படுகிறது. இது அப்பகுதி மக்களை கவலையடைய செய்துள்ளது.