/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய இரும்பு கடையில் தீ விபத்து
/
பழைய இரும்பு கடையில் தீ விபத்து
ADDED : ஜன 04, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இரும்பு பொருட்கள், அட்டைகள், கழிவுகள் எரிந்து நாசமாயின.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் முத்துராமலிங்ககுமார், 50, இவரது கடையில் நேற்று காலை 8:10 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரம் போராடிய அணைத்தனர். இதில் பழைய இரும்பு பொருட்கள், அட்டைகள், பேப்பர்கள், கழிவுகள் எரிந்து சேதமாயின.
தீ விபத்திற்கான காரணம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.