/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பட்டாசு கம்பி உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து
/
சிவகாசியில் பட்டாசு கம்பி உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து
சிவகாசியில் பட்டாசு கம்பி உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து
சிவகாசியில் பட்டாசு கம்பி உற்பத்தி நிறுவனத்தில் தீ விபத்து
ADDED : ஏப் 03, 2025 05:35 AM

சிவகாசி: சிவகாசியில் தேன் எடுப்பதற்காக தீ வைத்த போது கம்பி மத்தாப்பு ரக பட்டாசுக்கான கம்பி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகே சாமிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் 32. இவர் சிவகாசி பஸ் ஸ்டாண்டு பின்புறம் மாதவ் டிரேடர்ஸ் என்ற பெயரில் கம்பி மத்தாப்பு பட்டாசு உற்பத்தி செய்ய பயன்படும் கம்பி உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலர், அருகே உள்ள மரத்தில் தேன் கூட்டில் தேன் எடுப்பதற்காக தீ பற்ற வைத்தனர். அப்போது நிறுவனத்தின் மொட்டை மாடியில் வைத்திருந்த கழிவுகளில் தீப்பற்றியது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.