ADDED : ஜூன் 01, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரை சேர்ந்தவர் தங்க ராணி, 38. எஸ்.ஆர்.நாயுடு நகரில் பால் ,ஐஸ்கிரீம் மொத்த வியாபார கடை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கடையில் இருந்து புகை வந்தது. தங்கராணி கடையை திறந்து பார்த்த போது கடை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. சாத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
சப்டீலர்களுக்கு பால், ஐஸ்கிரீம் வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட 10 பிரீசர்கள் தீயில் எரிந்து கருகின. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.