ADDED : அக் 02, 2025 03:41 AM

காரியாபட்டி : காரியாபட்டி தொடுவன்பட்டியில் கோயில் திருவிழாவில் முளைப்பாரி பந்தலில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். முற்றிலும் எரிந்து நாசமானது. ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காரியாபட்டி தொடுவன்பட்டியில் வாழவந்தம்மன் கோயில் திருவிழா நடந்தது.
நேர்த்திக்கடனாக தனியாக கோயில் அருகே பந்தல் அமைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டன.
நேற்று முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்ல இருந்தது. நேற்று முன் தினம் இரவு, மர்ம நபர்கள் பந்தலில் தீ வைத்தனர். முழுதும் தீ பற்றி எரிந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த முளைப்பாரி, மின்விளக்குகள், குழாய், ஓயர்கள் என முற்றிலும் எரிந்து நாசமாயின.
போலீசார் குவிக்கப்பட்டனர். மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா அல்லது தீ விபத்து ஏற்பட்டதா என ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.