/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரேடியோ தெரபி அவசியம்; புற்று நோயால் பாதித்தவர்கள் அலைக்கழிக்கப்படும் அவலம்

ADDED : அக் 02, 2025 03:41 AM
தமிழகத்தில் விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தற்போது கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், வயிறு, எலும்பு புற்றுநோய்களை அந்தந்த துறை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக்குழு பரிசோதனை செய்து ஆராய்ந்து கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி நோயாளிகளை குணமடையை செய்து வருகின்றனர்.
மார்பக புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையை ஒரு மாதத்திற்கு 50 முதல் 60 பேர் செய்து கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனார் மார்பகங்களில் கட்டி, வீக்கம் ஆகிய பாதிப்புகள் வந்த பின் பரிசோதனை செய்ய வருகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் மேமோகிராம் பரிசோதனைக்கு ரூ. 1500 வசூலிக்கின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக பரிசோதனை எடுக்கப்படுகிறது.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ரேடியோ தெரபி, ஹீமோ தெரபி சிகிச்சைகள் இதுவரை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு நோயாளிகளை பரிந்துரை செய்ய வேண்டிய நிலையே தொடர்கிறது.
ரேடியோ, ஹீமோ தெரபி சிகிச்சைகள் அளிப்பதற்காக நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கினால் மட்டும் போதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் தயாராக உள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கான ரேடியோ தெரபி, ஹீமோ தெரபி ஆகிய சிகிச்சைகளை அளிக்கும் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.