நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : காரியாபட்டி இசலிமடை, நாசர் புளியங்குளம், பல்லவரேந்தல் கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு, முஷ்டகுறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.
அப்போது சிகிச்சைகள், சேவைகள் குறித்து கர்ப்பிணி பெண்களிடம் கேட்டறிந்தார். சுகாதார மையத்தின் தேவைகள் குறித்து மருத்துவரிடம் விசாரித்தார்.
மருந்து இருப்பு, பதிவேடுகளை ஆய்வு செய்தார். அத்யாவசிய மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் போதுமான அளவு கையிருப்பு உள்ளதை உறுதிப்படுத்தினார்.
மருத்துவமனையில் சுகாதார நிலை, உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.