/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவு பஞ்சு கோடவுனில் தீ பொருட்கள் எரிந்து சேதம்
/
கழிவு பஞ்சு கோடவுனில் தீ பொருட்கள் எரிந்து சேதம்
ADDED : மார் 31, 2025 01:35 AM

ராஜபாளையம்,: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கலங்காபேரி கம்மாபட்டி கழிவு பஞ்சு கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வாசுதேவ ராஜா மகன் நந்தா. கலங்காபேரி அருகே உள்ள கம்மாபட்டியில் பஞ்சு மில் நடத்தி வருகிறார்.
நேற்றிரவு 8:00 மணியளவில் கழிவு பஞ்சு வைத்திருந்த கோடவுனில் தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீ கோடவுன் முழுதும் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பொதிகளில் பற்றியதுடன் விலை உயர்ந்த மிஷின்களிலும் அருகில் உள்ள கட்டடங்களுக்கும் பரவியது.
தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துச்செல்வம் தலைமையிலான வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.