/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனத்தில் தீத்தடுப்பு கோடுகள்
/
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனத்தில் தீத்தடுப்பு கோடுகள்
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனத்தில் தீத்தடுப்பு கோடுகள்
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனத்தில் தீத்தடுப்பு கோடுகள்
ADDED : மார் 14, 2024 03:04 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
2023 நவ.,, டிச., மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து காணப்பட்டது. இதனால் வனப்பகுதியிலும் பசுமை சூழல் நிலவியது.
ஜனவரி முதல் வெயிலின் தாக்கம் துவங்கியது. இதனால் ஓடைகளில் நீர் வரத்து குறையத்துவங்கியது. தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுவதால் வனப்பகுதியில் பசுமை சூழல் குறைந்து இலைகள், செடி, கொடிகள் காய்ந்த நிலையை அடையத் துவங்கியுள்ளது.
இதனால் வனத்தின் பல இடங்களில் வறட்சியால் தீ விபத்து அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை தடுப்பதற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்துள்ளனர்.
ஒவ்வொரு வனச்சரக பீட்டுகளில் குறைந்தபட்சம் 4 மீட்டர் முதல் அதிகபட்சம் 10 மீட்டர் அகலத்தில் தீத்தடுப்பு கோடுகள் போடப்படுகிறது. காய்ந்த நிலையில் உள்ள செடிகளும் அகற்றப்படுகிறது. இப்பணியில் வனச்சரகர்கள், வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது வருஷநாடு மலைப்பகுதிக்கும், வத்திராயிருப்பு மலை பகுதிக்கும் இடையில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் சாஸ்தா கோயில், அய்யனார் கோயில், செண்பகத் தோப்பு காட்டழகர் கோயில், பிளவக்கல் அணை, சதுரகிரி போன்ற கோயில்களுக்கு வரும் பக்தர்கள், விடுமுறை நாட்களில் மலை அடிவாரத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

