/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலை மேலாளர்கள், போர்மேன்கள் பாதுகாப்பு பயிற்சி பெறுவது அவசியம்
/
விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலை மேலாளர்கள், போர்மேன்கள் பாதுகாப்பு பயிற்சி பெறுவது அவசியம்
விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலை மேலாளர்கள், போர்மேன்கள் பாதுகாப்பு பயிற்சி பெறுவது அவசியம்
விபத்தை தவிர்க்க பட்டாசு ஆலை மேலாளர்கள், போர்மேன்கள் பாதுகாப்பு பயிற்சி பெறுவது அவசியம்
ADDED : ஏப் 01, 2025 05:40 AM
சிவகாசி: மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் மேலாளர்கள், போர்மேன்கள் தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு வராதது வெடி விபத்திற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. எனவே பயிற்சி வகுப்பில் கண்டிப்பாக பங்கு பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார் வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதி மீறல்களால் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுகின்றது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு முக்கிய காரணமாக பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக சிவகாசியில் உள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் 35 ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், மேலாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இங்கு பயிற்சி பெற்ற இவர்கள் தங்கள் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவர். கடந்த காலங்களில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளிலிருந்து போர்மென்கள், மேலாளர்கள் பயிற்சிக்குச் செல்லவில்லை.
அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையம் சார்பில் முதல் முறை பயிற்சிக்கு வர தவறினால் ரூ. 5000 இரண்டாம் முறை வரத் தவறினால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும், மூன்றாம் முறை வரத் தவறினால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னரே ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள், மேலாளர்கள் பயிற்சிக்கு வந்தனர்.
விபத்து இல்லாமல் பட்டாசு தயாரிப்பதற்காக அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டும் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு விதிமுறைகள் விதித்த பின்னரே பயிற்சிக்கு வந்தனர்.
எனவே இந்த ஆண்டாவது முறையாக பயிற்சி வகுப்பிற்கு வந்து விபத்து இல்லாமல் பட்டாசு தயாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.