/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாந்தோப்பில் பட்டாசு தயாரிப்பு: 3 பேர் கைது
/
மாந்தோப்பில் பட்டாசு தயாரிப்பு: 3 பேர் கைது
ADDED : ஏப் 04, 2025 06:10 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் சின்னக்குட்டம் மலைக்கு பின்புறம் தங்கேஸ்வன் என்பவரது மாந்தோப்பில், அரசு அனுமதியின்றி வெடிமருந்துகளை வைத்து பட்டாசு தயாரித்த ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஏசுதாஸ் 43, கூமாபட்டி மாரிமுத்து 28, சேது நாராயணபுரம் தங்கேஸ்வரன் 49 ஆகியோரை கைது செய்து அங்கு பதுக்கி வைத்திருந்த திரியுடன் கூடிய குழாய் மூடைகள், சல்பர், வெடி உப்பு, கரி தூசி, சல்லடை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் வீட்டில் வெடி மருந்துகளை பதுக்கி வைத்த சேது நாராயணபுரம் சாந்தி 43, சின்னப்பர் 28 ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த திரியுடன் கூடிய குழாய் வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

