/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு; ஆய்வுகள் அவசியம்
/
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு; ஆய்வுகள் அவசியம்
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு; ஆய்வுகள் அவசியம்
உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு; ஆய்வுகள் அவசியம்
ADDED : மார் 24, 2025 06:20 AM
சிவகாசி: மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்க தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார் விருதுநகர், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தவிர 2000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் பெற்று வைத்திருக்கும் பட்டாசு கடை அருகே சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் , காட்டுப்பகுதிகளிலும் தகர செட் அமைத்தும், குடோனை வாடகைக்கு எடுத்தும் சட்டவிரோதமாக சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். இதுபோன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால் தவறு என தெரிந்தும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு நிவாரணம் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகின்றது.
இந்நிலையில் உரிமம் பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஏதேனும் விதிமீறல் இருந்தால் தற்காலிகமாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்கின்றனர். ஆனால் அதன் பின்னர் அதிகாரிகள் அந்த ஆலைகளை கண்டு கொள்வதில்லை. இதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், தங்களது பட்டாசு ஆலையின் முன்புற கேட்டை வெளியில் இருந்து பூட்டி விடுகின்றனர். ஆலையின் பின் பகுதியில் வழி ஏற்படுத்தி உள்ளே சட்ட விரோதமாக அதிக ஆட்களை வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் போது எந்த விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் மீண்டும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.