/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ், ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது
/
பஸ், ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது
ADDED : அக் 04, 2025 03:24 AM
சிவகாசி: தீபாவளி நேரம் என்பதால் பஸ், ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது என சிவகாசி ஆர்.டி.ஓ., பாலாஜி அறிவுறுத்தி உள்ளார்.
சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான் திருமண விடுப்பில் சென்றதை அடுத்து, ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலாஜி சிவகாசி ஆர்.டி.ஓ., வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் கூறுகையில், தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க வரும் மக்கள் ரயில், பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகளை கொண்டு செல்லக் கூடாது.
இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு கண்காணித்து வருவதால் பட்டாசு வணிகர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.