UPDATED : ஆக 08, 2026 06:29 PM
ADDED : ஆக 08, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி அருக நாரணாபுரம் புதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் 46. இவர் பராசக்தி காலனி ரோட்டில் உள்ள லாரி செட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து, 150 பெட்டிகளில் இருந்த ரூ. 2 லட்சத்து 97 ஆயிரத்து 355 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வடமலாபுரம் அண்ணா காலனியை சேர்ந்த கணேச மூர்த்தி 51. அதே பகுதியில் உள்ள தனது கடையில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து, ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
