/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சஸ்பெண்ட் ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பு
/
சஸ்பெண்ட் ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பு
ADDED : ஆக 12, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை விளாமரத்தப்பட்டியில் ஸ்ரீ ஜெயம் பட்டாசு ஆலையின் உரிமம் பட்டாசு விதிமுறை மீறல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அங்கு நேற்று மதியம் 3:30 மணிக்கு வி. ஏ.ஓ. மகேஸ்வரன் தலைமையில் வருவாய்த் துறையினர் ஆலைக்கு சென்று சோதனை செய்தபோது கோமாளி பட்டி கதிரேசன், அக்கரைப் பட்டி காசிராஜன், விளாமரத்துப் பட்டி முனியசாமி, விஜயகரிசல்குளம் தங்கம் ஆகியோர் சரவெடி உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் தப்பினர். பட்டாசுகளை பறிமுதல் செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.