ADDED : ஜன 12, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு விபத்து, அவசர சிகிச்சைக்கு முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை முதல்வர் அனிதா தலைமையில் நடந்தது.
ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், திருச்சுழி, காரியப்பட்டி, அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி, வத்திராயிருப்பு, நல்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நேற்று 25 பேர், இன்று 25 பேர் என மொத்தம் 50 பேருக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் அரசு மருத்துவமனை பொது அறுவைத்துறைத் தலைவர் கோகுல்நாத் பிரேம்சந்த் செய்தார்.