/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சென்னம்பட்டி வலது புற கால்வாயில் முதல் முறையாக நீர் வரத்து துவக்கம்
/
சென்னம்பட்டி வலது புற கால்வாயில் முதல் முறையாக நீர் வரத்து துவக்கம்
சென்னம்பட்டி வலது புற கால்வாயில் முதல் முறையாக நீர் வரத்து துவக்கம்
சென்னம்பட்டி வலது புற கால்வாயில் முதல் முறையாக நீர் வரத்து துவக்கம்
ADDED : அக் 13, 2024 04:19 AM

காரியாபட்டி: சென்னம்பட்டி அணைக்கட்டு வலது கால்வாயில் முதன்முறையாக நீர் வந்ததையடுத்து 40 ஆண்டு கால கனவு நிறைவேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரியாபட்டி, மல்லாங்கிணர் பகுதி விவசாயம் செழிக்க சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. போதிய மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து இன்றி வலது, இடது புற கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இடதுபுற கால்வாய் சீரமைக்கப்பட்டு அவ்வப்போது தண்ணீர் வந்தது. வலது புற கால்வாய் தூர் வாராமல் இருந்ததால் நீர்வரத்து இன்றி அப்பகுதி விவசாயம் பாதிக்கப்பட்டது.
அதனை சீரமைக்க அரசு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சமீபத்தில் வலது புற கால்வாய் சீரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. 19 கண்மாய்களுக்கு நீர்வரத்து கிடைக்கும் பட்சத்தில் 746.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
சில தினங்களாக பெய்த கனமழைக்கு குண்டாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு வலது புற கால்வாயில் 40 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு கண்மாய்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. நீண்ட நாள் கனவு நிறைவேறியதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி வரவேற்றார். நீர்வரத்தைக் கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
காரியாபட்டி, மல்லாங்கிணர் பகுதி விவசாயிகளால் 40 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டத்தின் மூலம் 19 கண்மாய்களுக்கு பாசன நீரை கொண்டு வரும் வகையில் அரசு முழுமையாக நிதி ஒதுக்கியது. முற்றிலும் புனரமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. சில தினங்களாக பெய்த மழை காரணமாக முதன் முறையாக நீர் வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கண்மாய் நிறைந்து விவசாயம் செழிப்படையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை., என்றார்.