ADDED : ஆக 23, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் 27 வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்விக் குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை. வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். டீன் மாரிசாமி வரவேற்றார். உளவியலாளர் ரகுநாத் பேசினார். இதில் 3000த்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு துறை தலைவர் ஸ்ரீராம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர்.