தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முதலாம் ஆண்டு மாணவர் துவக்க விழா

முதலாம் ஆண்டு மாணவர் துவக்க விழா

முதலாம் ஆண்டு மாணவர் துவக்க விழா


UPDATED : செப் 16, 2026 05:37 PM

ADDED : செப் 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 05:37 PM ADDED : செப் 16, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி:காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 32வது முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகம்மது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.

கிங்ஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முகமது ரியாஸ், சி. டி .எஸ், மென்பொருள் நிறுவன இணை இயக்குனர் இளையராஜா, எச்.சி.எல்., மண்டல தலைவர் வினோத் பேசினர். கல்லூரி சார்பாக நடந்த தகுதி ஊக்க தேர்வில் வெற்றி பெற்ற 63 மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தேர்வாணையத் தலைவர் முரளி கண்ணன், ஐ. கியூ .ஏ .சி. டி .சி., சிவரஞ்சனி, துணைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். டீன் ஷாநவாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை அறிவியல், மனிதநேய துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us