தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


UPDATED : செப் 16, 2026 05:33 PM

ADDED : செப் 16, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 05:33 PM ADDED : செப் 16, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:ராஜபாளையம் நகராட்சியில் முறையாக குடிநீர் சப்ளை வழங்காததை கண்டித்து குடியிருப்பு வாசிகள் முடங்கியார் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் நகராட்சி 11 வது வார்டு போஸ் பார்க் சுற்றுப்பகுதியில் திருஞானசம்பந்தர் தெரு, வடக்கு அக்ரஹாரம், போஸ் பார்க் தெருக்களுக்கு சனிக்கிழமை குடிநீர் வினியோகத்திற்கான முறை இருந்தும் நேற்று காலை வரை சப்ளை வழங்கவில்லை. ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட 20 க்கும் அதிகமானோர் காலி குடங்களுடன் முடங்கியார் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் நகராட்சி இன்ஜினியர் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்கி சப்ளை வழங்குவது குறித்து உறுதி அளித்ததற்கு பின் மக்கள் மறியலை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us