/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பு தாலுகாவில் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
/
வத்திராயிருப்பு தாலுகாவில் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
வத்திராயிருப்பு தாலுகாவில் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
வத்திராயிருப்பு தாலுகாவில் அகற்றப்படாத கொடிக்கம்பங்கள்
ADDED : மே 19, 2025 05:43 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியின் கொடி கம்பங்களை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த கொடிக்கம்பங்களை அந்தந்த பகுதி அதிகாரிகள் அகற்றினர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசு போக்குவரத்து கழகம் முதல் ரயில்வே ஸ்டேஷன் வரை அனைத்து பகுதிகளிலும் இருந்த 50-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்களை நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் அகற்றினர்.
இந்நிலையில் வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் இருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் சில கிராமங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. எனவே, விடுபட்ட பகுதிகளிலும் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.