ADDED : அக் 19, 2025 09:38 PM

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு நகராட்சி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாத்துார், ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் வெம்பக்கோட்டை, வல்லம்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வரு வதால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதை தொடர்ந்து நகராட்சி நிர் வாகம் கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச் சரிக்கை விடுத்தனர். ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆண்டாள்புரம், மேல காந்திநகர்,கீழக்காந்திநகர், பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையை இரும்பு பேரிகார்டு கொண்டு அடைத்தனர். ஆற்றுக்குள் கட்டட இடிபாடுகளையும் நகரில் இடித்து அகற்றப்பட்ட சிமென்ட் தண்ணீர் தொட்டிகளையும் கொட்டி உள்ளதால் தண்ணீரின் போக்கு மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாய நிலை உள்ளது.