நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக்கோட்டை அருகே கொட்டமடக்கி பட்டி அக்னி மாலைக் காரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
முன்னதாக மார்ச் 11ல் இரவு 7.00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. மார்ச் 12ல் அதிகாலை 5:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜையும் காலை 8:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது.
அன்று மாலை 5:00 மணிக்கு பூக்குழி திருவிழா நடந்தது .வெம்பக்கோட்டை , தாயில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மார்ச் 13ல் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

