/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழுகுமலை கோயிலில் மலர் காவடி திருவிழா
/
கழுகுமலை கோயிலில் மலர் காவடி திருவிழா
ADDED : ஜன 08, 2024 05:57 AM

சாத்துார் : துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆன கழுகாசல மூர்த்தி கோயிலில் நேற்று மலர் காவடி திருவிழா நடந்தது.
வேளாங்குறிச்சி ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் திருக்கைலாயபரம்பரை மெய் கண்டசந்தானம் பேரூர் ஆதீனம் 25 ஆவது குரு மகா சன்னிதானங்கள் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கோவை கவுமார மடாலயம் தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை மாநில சிறப்பு தலைவர் குமரகுருபர சுவாமிகள், மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவியின் ஸாக்த்தா மடாலயம் சுவாமி மாதாஜி, சுவாமி ஆத்மானந்தா ஆகியோர் மலர் காவடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
1008 மலர் காவடிகள் எடுத்தபடி பக்தர்கள் கலந்து கொண்டனர். மலர்கள் நிரம்பிய காவடியை சுமந்தபடி கிரிவலம் வந்தனர். சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கழுகுமலை சுற்று வட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகேஸ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.