/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் பூக்கடை பஜார்
/
மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் பூக்கடை பஜார்
மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் பூக்கடை பஜார்
மழைக்காலத்தில் வெள்ளத்தில் மிதக்கும் பூக்கடை பஜார்
ADDED : ஏப் 20, 2025 04:04 AM
அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை பூக்கடை பஜாரில் பல ஆண்டுகளாக மழை பெய்தால் பஜார் முழுவதும் வெள்ள காடாக மாறுவதை யடுத்து நகராட்சி மூலம் பல லட்சம் செலவில் வாறுகால் அமைத்தும் பயன் இல்லாமல் போய்விட்டது. இதனால் நகராட்சி அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை பூக்கடை பஜார் பகுதியில் பூக்கடைகள், பல சரக்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த வழியாகத்தான் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாணவர்கள், மக்கள் வந்து செல்வர். முக்கியமான இந்த பஜாரின் ரோட்டின் இருபுறமும் உள்ள வாறுகால் அடைப்பு, ஆக்கிரமிப்பால் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் வெள்ளமாக ஓடும்.
பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருப்பதால் இதை கருத்தில் கொண்டு நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் 3 மாதங்களாக வாறுகால் அமைக்கும் பணி நடந்தது. முறையாக வாறுகால் அமைக்காததாலும் வாறுகாலில் உள்ள கழிவுகள் அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் ஸ்லாப் போட்டு மூடி விட்டதாலும் கழிவுநீர், மழை நீர் வெளியேற முடியவில்லை.
இதனால் சிறிய மழைக்கே பூக்கடை பஜார் வெள்ளைக்காடாக மாறி வருகிறது . மக்களின் வரிபணம் வீணடிக்கப்பட்டதால் அருப்புக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.