ADDED : ஆக 12, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட குரு ராகவேந்திரர் பக்தர்கள் குழு சார்பில் ராகவேந்திரா சுவாமிகளின் 354வது ஆராதனை மஹோற்ஸவ விழா ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனத்தில் நடந்தது.
இதையொட்டி 8ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறியாளர் சிவக்குமார், கஜேந்திரன், மாரிமுத்து, விருதுநகர் மாவட்ட ஸ்ரீ குரு ராகவேந்திரர் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.

