/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
/
இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
இரு லாரிகளில் 55 டன் எள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
ADDED : செப் 28, 2025 03:14 AM

விருதுநகர்:விருதுநகர் அருகே வில்லிபத்திரியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இரு லாரிகளில் கொண்டு வரப்பட்ட 55 டன் எள்ளை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
விருதுநகரில் உள்ள நிறுவனத்திற்கு நல்லெண்ணெய் தயாரிப்பதற்காக நேற்று மதியம் இரு லாரிகளில் 734 மூடைகளில் 55 ஆயிரத்து 50 கிலோ எள் கொண்டு வரப்பட்டது. வில்லிபத்திரியில் வைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் இரு லாரிகளையும் சோதனை செய்தனர். இரு லாரிகளுக்கும், அதன் நிறுவனத்திற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் எள் லோடு ஏற்றி வந்திருப்பதையும், நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திற்கு எள் லோடு அனுப்பிய நிறுவனத்திற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இரு லாரிகளில் இருந்து எள் லோடு பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்காக எடுக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுப்பொருட்களை போக்குவரத்து செய்த நிறுவனம், அந்த நிறுவனம் மூலமாக உணவுப்பொருட்களை வடமாநிலத்தில் இருந்து கொண்டு வந்த எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாரியப்பன் தெரிவித்தார்.