/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தவெளியில் விற்கப்படும் பலகாரங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை
/
திறந்தவெளியில் விற்கப்படும் பலகாரங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை
திறந்தவெளியில் விற்கப்படும் பலகாரங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை
திறந்தவெளியில் விற்கப்படும் பலகாரங்கள் கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை
ADDED : பிப் 04, 2025 04:51 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தின்பண்டங்கள் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் விற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளதை உணவு பாதுகாப்பு அலுவலரும் கண்டு கொள்வதில்லை.
அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோடு, பந்தல்குடி ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சேவு, மிக்சர், இனிப்பு கடைகள் அதிகம் உள்ளன. இவற்றில் விற்கப்படும் சேவு, மிக்சர், சீவல், இனிப்பு வகைகள், சீரணி, பால் பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் ஒரு சில கடைகளில் பாதுகாப்பாக மூடி வைக்காமல் திறந்த வெளியிலேயே விற்கப்படுகின்றன. மேலும் கடைக்கு முன்பு முறுக்கு, அதிரசம், சமோசா உள்ளிட்ட பொருட்கள் திறந்த வெளியிலேயே தயார் செய்யப்படுகின்றன.
அண்ணாதுரை சிலை பகுதியில் உள்ள கடைகளில் திறந்த வெளியில் தான் தின்பண்டங்கள் பாதுகாப்பின்றி விற்கப்படுகின்றன. இந்த வழியாக தினமும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தூசியை கிளப்பிய படி செல்கின்றன. கிளம்பும் தூசி அனைத்தும் தின்பண்டங்களின் மீது ஒட்டிக்கொள்கிறது. இதனால் உடலுக்கு சுகாதார கேடும், வயிற்று கோளாறும் ஏற்படுகிறது.
உணவு பாதுகாப்பு அலுவலர் தின்பண்டங்களை பாதுகாப்பாக மூடி வைத்து விட வேண்டும் என பல முறை அறிவுறுத்தினாலும் ஒரு சில நாட்கள் மட்டும் பேருக்கு மூடி வைத்துவிட்டு, பின் பழையபடி திறந்த நிலையிலே தின்பண்டங்களை விற்கின்றனர். மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் இது குறித்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான முறையில் உணவுகளை மூடி வைக்க வேண்டும், திறந்த வெளியில் தயார் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

