ADDED : டிச 12, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலியாக உள்ள சமையலர், உதவியாளர் பணியிடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் இருந்து தொகுப்பூதியத்தில் நியமிப்பது நிறுத்துதல், சத்துணவு ஊழியர்களை நிரந்தரமாக நியமித்தல், காலை உணவுத்திட்டத்தை தனியாரிடம் கொடுப்பதை நிறுத்தி சத்துணவு ஊழியர்களை ஈடுபடுத்துதல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட துணைத் தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கிளைச் செயலாளர் ராமலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.