/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்
/
திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்
திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்
திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள்
ADDED : ஜன 01, 2026 06:01 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயில் அதிக அளவிலான செங்கால் நாரைகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. எனவே இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கால் நாரைகள் ஐரோப்பாவில் மரங்கள், கட்டடங்கள், புகைபோக்கிகள் போன்ற உயரமான இடங்களில் பெரிய கூடுகளைக் கட்டி குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. நவ. முதல் மார்ச் வரை தமிழ்நாட்டில் காணப்பட்டாலும், அவை வலசை வரும் பறவைகள் என்பதால், இங்கே கூடுகட்டி குஞ்சு பொரிப்பதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் இவை, பெரும்பாலும் இரைதேடவே வருகின்றன. இந்நிலையில் செங்கால் நாரை பறவைகள் திருத்தங்கல் பகுதியில் அதிக அளவில் வலசை வந்துள்ளன.
திருத்தங்கல் உறிஞ்சிகுளம் கண்மாயில் ஆண்டுதோறும் செப்., அக்., நவ., மாதங்களில் செங்கால் நாரை உள்ளிட்ட பறவைகள் பல்வேறு இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றன . உணவிற்காக வலசை வரும் இப்பறவைகளில் ஒரு சில பறவைகள் இங்கேயே தங்கிவிடும்.
இந்நிலையில் தற்போது உறிஞ்சிகுளம் கண்மாயில் செங்கால் நாரைகள் உணவிற்காக வருகை தந்துள்ளன. தவிர சின்ன கொக்கு அல்லது சிறு வெண் கொக்கு என அழைக்கப்படும் உள்ளூர் பறவைகள் முதல் நண்டுண்ணி உள்ளான், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சாம்பல் நாரை, உள்பட உள்பட பல்வேறு வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்துள்ளன. இதேபோல் திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. எனவே இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என பறவை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

