ADDED : அக் 11, 2025 03:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் வன விரிவாக்க மையத்தில் நடந்தது.
துணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். உதவி வன பாதுகாவலர் ஞானப்பழம் முன்னிலை வகித்தார். உயிரியலாளர் பார்த்திபன், வனச்சரகர்கள் செல்ல மணி, கார்த்திக், ராஜேந்திரன் உட்பட வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு ராஜபாளையம் பகுதி விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயிர்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளில் இருந்து காப்பாற்றுதல், காலதாமதமின்றி இழப்பீடுகள் வழங்குதல், விவசாயிகள் சுட்டிக்காட்டும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தி தருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என உதவி இயக்குனர் பதில் அளித்தார்.