/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில்--- தனிஷ்க் ஷோரூம் திறப்பு
/
ராஜபாளையத்தில்--- தனிஷ்க் ஷோரூம் திறப்பு
ADDED : அக் 11, 2025 03:47 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம் 63 வது கிளை திறப்பு விழா நடந்தது.
டைட்டன் கம்பெனி நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் திறந்த வைத்தார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் செல்வராஜன் தலைமை வகித்தார். அருணா ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் ராஜேஷ், டைட்டன் மண்டல விற்பனை முதன்மை அதிகாரி அஜய் திவேதி, பிராந்திய வர்த்தக மேலாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், எம்.பி., ராணி, நகராட்சி தலைவர் பவித்ரா குத்து விளக்கு ஏற்றினர்.
தனிஷ்க் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் கூறியதாவது, 6000 சதுர அடி புதிய ஷோரூமில் தனித்துவ வடிவமைப்பில் ஜொலிக்கும் தங்க நகைகள், மின்னும் வைரம், குந்தன் போல்கி நகைகள் விற்பனைக்கு உள்ளன.
சமீபத்திய வரவான அகல்யம் நுட்பமான கைவினை திறனை காட்டுவதோடு ஆன்மிக அடையாளத்தை நினைவூட்டும் வகையிலும், சோழா நகைகள் சோழர் சாம்ராஜ்யத்திற்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 9 காரட் வரை அனைத்து காரட் மதிப்புகளிலும் தங்க பரிமாற்றத்தில் 0 சதவீத கழிவு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்திய பெண்களின் ரசனை விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியமிக்க தற்கால நடை முறைக்கேற்ற நகைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தனிச்சிறப்பு மிக்க ஒரே நகை நிறுவனம் தன்ஷ்க்.
மிக தூய்மையான நகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக தனிஷ்க் விற்பனையகங்களில் அதிநவீன காரட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் வெளிப்படை தன்மையுடன் பரிசோதித்து அறிந்து கொள்ளலாம் ,என்றார்.