ADDED : அக் 11, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: சேத்துார் அடுத்த சொக்கநாதன்புத்துார் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது.இக்கோயில்விழா அக். 2 ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு குடை சப்ரத்தில் அம்மன் வீதி உலாவை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ஊர் நிர்வாகிகள், பக்தர்கள் 4 ரத வீதி வழியாக சுற்றி இழுத்து வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.