/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மண் பாதையை அடைத்து பேரிகாடுகள்: நடந்து செல்வோர் தவிப்பு
/
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மண் பாதையை அடைத்து பேரிகாடுகள்: நடந்து செல்வோர் தவிப்பு
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மண் பாதையை அடைத்து பேரிகாடுகள்: நடந்து செல்வோர் தவிப்பு
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மண் பாதையை அடைத்து பேரிகாடுகள்: நடந்து செல்வோர் தவிப்பு
ADDED : மே 19, 2025 05:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் மக்கள் நடந்து செல்லும் மண் பாதையை அடைத்து பேரிகாடுகள் வைத்திருப்பதால் நடந்து செல்வோர் விபத்திற்கு ஆளாகும் அபாயமும் உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதி வழியாக அழகாபுரியில் இருந்து ராஜபாளையம் வரை மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் வழியாக டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஏராளமான வாகனங்கள் தினமும் அதிவேகத்தில் இயங்கி வருகிறது.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி வழியாக விருதுநகர் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோட்டிலும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், பட்டாசு ஆலை வாகனங்கள் காலை, மாலை வேலை நேரங்களில் அதிகளவில் அதிவேகத்தில் செல்கிறது. மேலும் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லும் டிராக்டர்கள், கனரக லாரிகளும் தினமும் பயணித்து வருகிறது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட இடங்களிலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ள இடங்களிலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் தார் ரோட்டின் இருபுறமும் உள்ள மண் ரோட்டில் மக்கள் நடந்து செல்லும் பாதையை அடைத்தும் வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ரோட்டின் மையப்பகுதிக்கு வந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அச்சமயம் எதிரில் வரும் வாகனங்களால் சைக்கிள்கள், டூவீலர்களில் வருபவர்களும் நடந்து செல்பவர்களும் விபத்திற்கு ஆளாகும் சூழல் காணப்படுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் அச்சப்படுகின்றனர்.
சிவகாசி ரோட்டில் செங்குளம் விலக்கு, நீதிமன்றம், மல்லி போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், ராஜபாளையம் ரோட்டில் வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவு பகுதி, மம்சாபுரம் விலக்கு பகுதியிலும் மண் ரோட்டை அடைத்து பேரிகாடுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்து மண் ரோட்டில் மக்கள் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.