நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று மாலை தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணக்கிட்டு படிவம் வழங்கும் பணிக்கான முகாம் நடந்தது.
ஓட்டுப்பதிவு அலுவலர் ரமேஷ், தேர்தல் பிரிவு துணை அலுவலர் சசிகலா, நகராட்சி கமிஷனர் குமார் பங்கேற்றனர். தி.மு.க, அ.தி.மு.க. உட்பட அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சி நிர்வாகிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, அதிகாரிகளிடம் சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டது.
இன்று முதல் அவர்கள் வீடு வீடாக வந்து படிவங்கள் கொடுக்க உள்ளனர். அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் உடன் வருவர். படிவத்தை காலதாமதமின்றி பூர்த்தி செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

