/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., என் மீது போட்ட வழக்குகளுக்கு பயந்தோ பணிந்தோ போகவில்லை சொல்கிறார் அ.தி.மு.க., மாஜி அமைச்சர்

ADDED : அக் 18, 2025 03:34 AM

சிவகாசி: தி.மு.க., ஆட்சியில் என் மீது போட்ட வழக்குகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பயந்தோ பணிந்தோ போகவில்லை., என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
திருத்தங்கலில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க ., அலுவலகத்தில் கட்சியின் 54 வது ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிக்கொடி ஏற்றினார். தொடர்ந்து மக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்த அ.தி.மு.க., கட்சியின் 54 வது ஆண்டு துவக்க நாள் கொண்டாடுகிறோம். தி.மு.க., ஆட்சியில் என் மீது போட்ட வழக்குகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டேன். பயந்தோ பணிந்தோ போகவில்லை. பிரச்னைகளை கண்டு அஞ்சுவது அ.தி.மு.க.. காரர்களாக இருக்கக் கூடாது.
உழைப்பவர்களை எந்த சமுதாயம் என்று பார்க்க மாட்டேன். கடந்த காலங்களைப் போலில்லாமல் இனி வரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். உழைத்தால் கட்சியில் நல்ல எதிர்காலம் உண்டு.
கருத்துக் கணிப்புகளில் அ.தி.மு.க., கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல் வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகரில் நேற்றுமுன் தினம்நடந்த பூத் கமிட்டி கூட்டங்களில் அவர் பேசியதாவது: கொள்ளையடிப்பதில் கூட்டுமுயற்சி கொண்ட இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தி.மு.க.,வின் உருட்டுக்களும், திருட்டுக்களும் என தங்களிடம் அச்சிடப்பட்டு தரும் துண்டு பிரசுரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
பூத் வாரியாக வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி அதில் மக்களை இணைத்து தி.மு.க.,வின் பொய், புரட்டுகளை அம்பலப்படுத்த வேண்டும். ஏதாவது பெரிய பிரச்னையை உருவாக்கி விட்டு, மற்ற பிரச்னைகளை மறக்கடிக்க செய்கின்றனர். 2026ல் மக்கள் தர்ம அடி கொடுப்பர், என்றார்.