/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வராததன் தாக்கம் 11 மாதங்களில் தெரியும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

ADDED : ஏப் 21, 2025 05:27 AM
அருப்புக்கோட்டை: பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என கூறினர். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இதன் தாக்கம் இன்னும் 11 மாதங்களில் தெரியும் என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் நீட் தேர்விற்காக உயிர் இழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: அமைச்சர் பொன்முடி மீது 2 நாட்களில் வழக்கு தொடர வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். பொன்முடி மனிதர் அல்ல மிருகம் போல் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும் அசிங்கப்படுத்துவது போல் பலமுறை பேசியிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வனத்துறை சரியான துறை தான். மிருகங்கள் இருக்கக்கூடிய துறை. அவர் எந்த துறை அமைச்சராகவும் இருக்கக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்.
டிபன் பாக்ஸில் அரிவாளை வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவது எவ்வளவு கேவலமான விஷயம். இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தனர். கல்வி அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு போஸ்டர் ஓட்டுவதே வேலையாக உள்ளது. அரசு ஊழியர்களும் தொடர்ந்து தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என கூறினர். ஆனால் ஒன்றும் செய்யவில்லை. இதன் தாக்கம் இன்னும் 11 மாதங்களில் தெரியும். ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., டெபாசிட் இழக்கும், என்றார். - - -