/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணி உடையும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆரூடம்
/
எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணி உடையும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆரூடம்
எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணி உடையும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆரூடம்
எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணி உடையும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆரூடம்
ADDED : ஏப் 23, 2025 05:58 AM
விருதுநகர் : தி.மு.க., கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியும் முழு மனதுடன் அங்கு இல்லை. சூழ்நிலை கைதியாக அங்கு உள்ளனர். எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணி உடையும், என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதை கூட்டணியில் உள்ளவர்கள் கண்டிக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர். முதல்வரின் கட்டுப்பாட்டில் எந்த ஒரு அமைச்சரும் இல்லை. தி.மு.க., கட்சியே முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா என சந்தேகம் எழுகிறது. தி.மு.க., அமைச்சர்கள் இடையே ஈகோ இருப்பதால் கட்சிக்குள் குழப்பம் உள்ளது.
நீட் தேர்வை கொண்டு வந்தது காங். அதற்கு துணை போனது தி.மு.க., நீட் தேர்வு வேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதாடியவர் காங். கட்சி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். செய்ததெல்லாம் தி.மு.க., கூட்டணி. ஆனால் பழி அ.தி.மு.க., மீதா.
1999 லோக்சபா தேர்தலில் தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து 5 அமைச்சர்களை வைத்திருந்தபோது அந்த கூட்டணி இனித்திருந்தது.
தற்போது பா.ஜ., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால் மக்கள் மனதில் ஒரு பிரளயம் ஏற்பட்டது தெரிந்தவுடன் தி.மு.க.,வினரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தின் காரணமாக தொலைபேசி ஒட்டுக்கேட்பது என்ன, ஆள் விட்டு கூட வேவு பார்ப்பர். தி.மு.க.,வினருக்குஅரசு பதவி கிடைத்தால், அத்துமீறுவது, அதிகார துஷ்பிரயோகம் செய்வது வாடிக்கை.
அரசியலில் கீழ்த்தரமான செயல் செய்வர். தி.மு.க.,வின் நாடகம் இனி எடுபடாது.
பல கட்சிகள் அ.தி.மு.க.,வை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியும் முழு மனதுடன் அங்கு இல்லை. சூழ்நிலை கைதியாக அங்கு உள்ளனர். எந்த நேரத்திலும் தி.மு.க., கூட்டணி உடையும், என்றார்.

