/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., அரசு விளம்பரத்தில் ஆட்சியை நடத்துகிறது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
/
தி.மு.க., அரசு விளம்பரத்தில் ஆட்சியை நடத்துகிறது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
தி.மு.க., அரசு விளம்பரத்தில் ஆட்சியை நடத்துகிறது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
தி.மு.க., அரசு விளம்பரத்தில் ஆட்சியை நடத்துகிறது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
ADDED : ஆக 04, 2025 03:53 AM
விருதுநகர்: தி.மு.க., அரசு நான்கரை ஆண்டுகளாக எந்த திட்டங்களையும் கொண்டுவராமல் விளம்பரத்தில் மட்டுமே ஆட்சியை நடத்துகிறது என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
விருதுநகர் மாவட்டத்திற்கான அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: தி.மு.க., அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த திட்டங்களையும் கொண்டுவராமல் விளம்பரத்தில் மட்டுமே ஆட்சியை நடத்துகிறது. சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு உட்பட தி.மு.க., அரசின் நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மாநாடு போல நடந்து வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் சென்னை கோட்டையில் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்கும் போது விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும், என்றார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்திற்காக வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்க மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அனைத்து நிலையில் உள்ள 21 ஆயிரம் கட்சி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தபால் அனுப்பியுள்ளேன்.
கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு முறை நாம் தோற்று இருக்கலாம். ஆனால் 2026 சட்டசபை தேர்தலில் பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை கோட்டையில் கொடியேற்றுவதற்கு விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று துணையாக இருப்போம், என்றார்.