/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகர்மயமாக்கலில் தொடர்ந்து மாயமாகும் பாசன கால்வாய்கள்
/
நகர்மயமாக்கலில் தொடர்ந்து மாயமாகும் பாசன கால்வாய்கள்
நகர்மயமாக்கலில் தொடர்ந்து மாயமாகும் பாசன கால்வாய்கள்
நகர்மயமாக்கலில் தொடர்ந்து மாயமாகும் பாசன கால்வாய்கள்
ADDED : ஆக 04, 2025 03:53 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுப்பகுதியில் பெருகும் குடியிருப்புகளால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விளை நிலங்களை பிளாட்டுகளாக மாற்றும் செயலில் பாசன வடிகால்கள் மாயமாவது குறித்து விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மொத்தம் 42 வார்டுகளுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொழில், கல்வி, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கிராமப் பகுதியில் இருந்து நகரை நோக்கி வருபவர்களுக்காக புதிய குடியிருப்புகள் உருவாகி வருகிறது.
இதன் காரணமாக விளை நிலங்கள் புதிய குடியிருப்பு மனைகளாக உருவாகின்றன. இதனால் ஏற்கனவே உள்ள பாசன நீர்ப்பாதைகள் தொடர்ந்து மாயமாகி வருகின்றன. நகரை சுற்றியுள்ள புதுக்குளம், புளியங்குளம், கருங்குளம், பிரண்டை குளம் உள்ளிட்ட கண்மாய்களின் நன்செய் நிலங்களில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் விதிகளை மீறி பிளாட்டுக்களாக மாற்றி வரு கின்றனர்.
இது குறித்து விவசாயி சந்திரன்: விதிமுறைப்படி நெல் விளையும் நன்செய் நிலங்களில் தரிசு நிலங்களாக இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே வகை மாற்ற முடியும். ஆனால் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கண்முன்னே நடைபெற்று வரும் செயல்களால் பாதிப்பிற்கு உள்ளாவது சாதாரண விவசாயிகள் மட்டுமே.