/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., மனு தள்ளுபடி
/
பட்டாசு ஆலை அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., மனு தள்ளுபடி
பட்டாசு ஆலை அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., மனு தள்ளுபடி
பட்டாசு ஆலை அபகரிப்பு வழக்கு மாஜி எம்.எல்.ஏ., மனு தள்ளுபடி
ADDED : ஆக 14, 2025 02:51 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர் ரவிச்சந்திரனை மிரட்டி சொத்துக்களை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவகாசி சக்தி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உடன் சேர்ந்து ஒரு பட்டாசு ஆலையை கூட்டாக நடத்த ராஜவர்மன், அ.தி.மு.க. நிர்வாகிகள் தங்க முனியசாமி, ரவிச்சந்திரன் முதலீடு செய்தனர். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் திட்டத்தை கைவிட்டு முதலீட்டை திரும்ப பெற்றனர். ரவிச்சந்திரன் மட்டும் பட்டாசு ஆலையை நடத்தினார்.
இந்நிலையில் 2019ல் ரவிச்சந்திரனை அப்போதைய டி.எஸ்.பி. ராஜேந்திரன், எஸ்.ஐ. முத்துமாரியப்பன் உதவியுடன் ஸ்ரீவில்லிபுத்துார் லாட்ஜில் வைத்து மிரட்டி சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்று அ.தி.மு.க. நிர்வாகி ரவிச்சந்திரன், மனைவி அங்காள ஈஸ்வரி பெயரில் ஆலையை பதிவு செய்து அபகரித்ததாக ஸ்ரீவில்லிபுத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு செய்யப்பட்டது.
இதனைடுத்து நீதிமன்ற உத்தரவின் படி டி.எஸ்.பி. சபரிநாதன் விசாரித்து ராஜவர்மன் உட்பட 6 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும்நிலையில் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜவர்மன், மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணைக்கு பின்னர் ராஜவர்மனின் மனுவை நீதிபதி சுபாஷினி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.