/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளியில் ஆசிரியையை தாக்கிய முன்னாள் மாணவருக்கு 'காப்பு'
/
பள்ளியில் ஆசிரியையை தாக்கிய முன்னாள் மாணவருக்கு 'காப்பு'
பள்ளியில் ஆசிரியையை தாக்கிய முன்னாள் மாணவருக்கு 'காப்பு'
பள்ளியில் ஆசிரியையை தாக்கிய முன்னாள் மாணவருக்கு 'காப்பு'
ADDED : டிச 25, 2025 05:58 AM
வச்சக்காரப்பட்டி: அரசு பள்ளியில் புகுந்து, ஆசிரியையை கடுமையாக தாக்கிய, முன்னாள் மாணவரான, 17 வயது மாணவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வி, 36. ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர். இவர் தன் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன், 'கடந்தாண்டு பிளஸ் 1 படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை போல இருக்கக் கூடாது' என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தன்னை பற்றி ஆசிரியை பேசியதை அறிந்த அந்த முன்னாள் மாணவர், நேற்று முன்தினம், 11:15 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியையிடம் ஆபாசமாக பேசி, அவரை கடுமையாக தாக்கினார்.
இதில், படுகாயம் அடைந்த ஆசிரியை, முதலுதவி சிகிச்சை பெற்றார். தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனை, வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து, மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.