ADDED : மார் 07, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: செட்டியார்பட்டி, சேத்துார் பேரூராட்சிகளில் ரூ.10 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
செட்டியார்பட்டி அரிசி வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு கூடுதல் குடிநீர் திட்டம், நீரேற்று நிலையத்திற்கு 24 மணி நேர மின் இணைப்பு, சேத்துார் பேரூராட்சி தலைமை நீரேற்றும் நிலையத்திற்கு மும்முனை மின் இணைப்பு என ரூ.13 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

