/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.30.80 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
/
ரூ.30.80 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
ADDED : அக் 21, 2024 12:43 AM
ராஜபாளையம் : மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.30.80 லட்சத்தை மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் 57, வியாபாரி. ஆண்டுதோறும் சுற்றுலாவிற்கு நண்பர் உடன் சேர்ந்து வெளிநாடு செல்வது வழக்கம்.
மலேசியாவிற்கு சுற்றுலா செல்வதற்கு சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜன்ட் அருண்குமார், அவரது மனைவி ஜெய ப்ரீத்தி ஆகியோரிடம் குழுவினருக்கு என ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார்.
செப். 18ல் சுற்றுலா செல்ல உறுதியளித்து தயாராக இருந்தவர்கள் தம்பதியினரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் ராஜபாளையம் வடக்கு போலீசார் கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

