/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்
/
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் புழக்கம் தாராளம்
ADDED : பிப் 02, 2025 04:37 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நகர் புறநகர் பகுதிகளில் பெட்டிக்கடைகள்,பள்ளி கல்லூரி பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தராளமாக புழக்கத்தில் உள்ளன.
அருப்புக்கோட்டைக்கு தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்களில் புகையிலை பொருட்கள் இரவில் ஏற்றப்பட்டு அதிகாலையில் வந்து இறக்கப்படுகின்றன. பின்னர் அவை டூவீலர்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது.
இவற்றை விற்கும் குறிப்பிட்ட கடைகளில் கூலி தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாங்குகின்றனர். போலீசாரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக கடமைக்கு ஒரு சிலரை கைது செய்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் நேற்று டவுன் போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக வீராச்சாமி தெருவை சேர்ந்த கருப்பசாமி, 50, திருச்சுழி ரோடு அருகே விஜயபாண்டி,54, ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.புகையிலை பொருட்களை விற்கும் முக்கிய ஏஜன்டுகள் மற்றும் பெரிய வியாபாரிகளை பிடித்து நடவடிக்கை எடுத்தால் தான் நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பழக்கம் குறையும். மாவட்ட போலீஸ் நிர்வாகம் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.