ADDED : அக் 18, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்., கல்வியியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், சிவகாசி டாக்டர் அனில்குமார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜு, செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவ ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகணேசன் செய்தார்.