ADDED : செப் 29, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி, : திருச்சுழியில் ஸ்பீச் தொண்டு நிறுவனத்தில் சட்ட பணிகள் குழு சார்பில், இலவச சட்ட உதவி முகம் நடந்தது.
வக்கீல் கணேஷ்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான போக்சோ சட்டம் குறித்து பேசினார். பொது சட்டங்கள், பெண்களுக்கான சட்டங்கள், கோர்ட்டுகளை அணுகும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நிறுவன நிர்வாகிகள், அலுவலர்கள், ஊழியர்கள், பெண்கள் உட்பட கலந்து கொண்டனர்.