நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சக்கராஜாக்கோட்டை ஷத்திரிய ராஜூக்கள் பொது மகாசபை, தேசிங்கு ராஜா பண்ணை நினைவாக சக்தி பாலா மருத்துவமனை இணைந்து எலும்பு, மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
சத்திரிய ராஜூக்கள் நான்கு கோட்டை மகாசபை தலைவர் சின்ன வெங்கட்ராஜா துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கலந்து கொண்டார்.
எலும்பியல் நோய் நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் டாக்டர்கள் மைக்கேல், அருண் பிரகாஷ், பிசியோதெரபிஸ்ட் ராமராஜ், ஜெகதீஸ்வரன் பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் எலும்பு தொய்வு நோய் கண்டறியும் ஸ்கேன், ரத்த சர்க்கரை, பாத நரம்பு வலி பரிசோதனைகளுடன் ஆலோசனை, மருந்துகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தினர் சார்பில் ரவிராஜா செய்திருந்தார்.