ADDED : ஜூன் 23, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் பாலாஜி மருத்துவமனை சார்பில் மகளிர், பல், பொது மருத்துவ முகாம் நடந்தது. மகளிர் நோய் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் ரூபா, பொது மற்றும் குடும்ப நல டாக்டர் ராம பிரசாத், பல் மருத்துவர் ராஜமாணிக்கம் தலைமையிலாயின மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை செய்தனர்.
பெண்களுக்கு இலவச இரத்தம் அழுத்தம், வளர் இளம் பெண்களுக்கு ஆலோசனை, முகம், வாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி ஆலோசனை, மாதவிடாய் பிரச்னை, பல் சம்பந்தமான நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 120 நோயாளிகள் பயன்பெற்றனர். ஏற்பாடுகளை டாக்டர்கள் ரூபா, ஜெயலட்சுமி செய்திருந்தனர்.